சட்டை காலரை பிடித்த போலீசாருக்கு தர்ம‌ அடி கொடுத்த குடும்பம்… பரபரப்பு வீடியோ…

மகாராஷ்டிரவாவில் பொதுமக்கள் முன்னிலையில் சட்டை காலரை பிடித்த போலீஸ்கார‌ரை ஒரு குடும்ப‌மே சேர்ந்து தர்ம அடி கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், டாக்டர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது, பொதுமக்களின் முன்பு, ஒருவரின் சட்டை காலரை பிடித்து போலஸ்கார‌ர் இழுத்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரும், அவரது குடும்பத்தினரும், போலீஸ்கார‌ரை சரமாரியாக தாக்கினர். மேலும், அரவது சீருடையை கிழித்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை தடுத்தனர். உடன் வந்த போலீஸ்கார‌ரும் தடுத்து, மீட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான போலீசாரின் சட்டை கிழிந்த‌து. மேலும், அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.