நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேமம் வைபுடன் திரும்பி வந்திருக்கிறார் நடிகர் நிவின் பாலி.
நிவின் பாலி
பிரேமம் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. தமிழில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் படம் இவருக்கு கோலிவுட் மார்கெட்டை பெரிதுபடுத்தியது. ஓம் ஷாந்தி ஓஷானா, பெங்களூர் நாட்கள் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த நிவின் பாலி சில காலம் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். மலையாளத்தில் ராஜீவ் ரவி இயக்கத்தில் துறைமுகம் படம் கடந்த ஆண்டு வெளியானது. மலையாளத்தில் அடுத்தடுத்தப் புது முக நடிகர்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நிவின் பாலிக்கு என ஒரு தனி இடம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போது இருந்து வருகிறது.
ஏழு கடல் ஏழு மலை
இயக்குநர் ராம் இயக்கத்தில் தற்போது நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது . கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நிவின் பாலி நடித்திருக்கும் படமே மலையாளி ஃப்ரம் இந்தியா.
மலையாளி ஃப்ரம் இந்தியா
#1 on Trending for Music #MalayaleeFromIndia https://t.co/xDj3l2GAz6#NivinPauly #DhyanSreenivasan pic.twitter.com/6E27TOlLCj
— Cine Safari (@CineSafari) March 25, 2024
ப்ரித்விராஜ் நடித்த ’ஜன கன மன ‘ படத்தை இயக்கி கவனமீர்த்தவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. தற்போது அவர் நிவின் பாலி வைத்து மலையாளி ஃப்ரம் இந்தியா (Malayalee From India) படத்தை இயக்கியுள்ளார். தயன் ஸ்ரீனிவாசன் , அனஸ்வாரா ராஜன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் கடந்த ஆண்டு இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.
தற்போது இந்தப் படத்தில் இருந்து கிருஷ்ணா என்கிற பாடல் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. பிரேமம் படத்தில் வரும் ஆழுவா பாடல் போல் இந்தப் பாடலில் நிவின் பாலி அதே ரொமாண்டிக்கான ஒரு பாடலில் காணப்படுகிறார். நீண்ட நாட்களாக ஒரு சாக்லேட் பாயாக நிவின் பாலியை பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் உற்சாகத்தை கிளப்பியுள்ளது இந்த கிருஷ்ணா பாடல்.
மேலும் காண