Ipl 2024 Rohit Sharma missed out on becoming the highest run scorer against Delhi Capitals Virat kohli


டெல்லி அணிக்கு எதிரான கோலியின் சாதனையை ரோகித் சர்மா தவறவிட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இதுவரை 19 லீக் போட்டிகள் முடிந்து இன்று (ஏப்ரல் 7) 20 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கி இருக்கிறது. அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடந்த போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்ற பெறும் நோக்கில் விளையாடுகிறது.
 
சாதனையை தவற விட்ட ரோகித் சர்மா:
ஐ.பி.எல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார். அதாவது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக கோலி இதுவரை 28 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

ROHIT SHARMA MADNESS AT WANKHEDE 🔥- What a player. pic.twitter.com/GCcYwS6b1A
— Johns. (@CricCrazyJohns) April 7, 2024


இதில், 10 அரைசதங்கள் உட்பட 99 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1030 ரன்களை குவித்திருக்கிறார். அந்தவகையில் ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக ரோகித் சர்மா டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக 33 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 977 ரன்கள் எடுத்து இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான 34 வது போட்டியில் களம் இறங்கினார் ரோகித் சர்மா.
அதன்படி தொடக்க ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அமைத்துக்கொடுத்த அவர் தனது 49 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதாவது கோலியின் சாதனையை முறியடிக்க 3 ரன்கள் மட்டுமே தேவைபட்ட சூழலில் விக்கெட்டை பறிகொடுத்து டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற  என்ற கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை  நூலிழையில் தவறவிட்டார் ரோகித் சர்மா. அதேநேரம் ஏப்ரல் 27 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பதால் அந்த போட்டியில் நிச்சயம் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: Faf Du Plessis: ”கடைசி ஓவர்களில் விராட் அதிக ரன்களை எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்” – டூ ப்ளெசிஸ் ஓபன் டாக்
மேலும் படிக்க:IPL RCB: என்னாச்சு ஆர்.சி.பி.க்கு? தன்னம்பிக்கையுடன் மீண்டு வர என்ன செய்ய வேண்டும்? ஓர் அலசல்
 

மேலும் காண

Source link