மலையாள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. தென் மாவட்ட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த இப்படத்தை ஏற்கனவே தெலுங்கில் வெளியிடும் உரிமையை எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா பெற்றுள்ளார். அதை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிரேமலு’ படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு தான் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். ஏற்கனவே இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரிபெல்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்து வந்தார். படப்பிடிப்பின்போது பாலா தன்னை அடித்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் முடிவுக்கு வந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மமிதா பைஜு, பிரேமலு படத்திற்கு பிறகு மிகவும் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொதுவாகவே மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வந்துள்ளனர். அந்த வரையில் மமிதா பைஜுவும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் விஷ்ணு விஷாலை வைத்து ஏற்கனவே ராட்சன், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராம்குமார் மீண்டும் அவரை வைத்து ஒரு காதல் கலந்த ஃபேண்டஸி படம் ஒன்றை இயக்க உள்ளார். அப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது என்ற தகவலை விஷ்ணு விஷால் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் பகுதியில் பிறந்த மமிதா பைஜு தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். சிறு வயது முதலே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மமிதாவுக்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சைக்காலஜி படிப்பை முடித்துள்ள மமிதா தமிழ் படங்களையும் அதிக அளவில் விரும்பி பார்ப்பாராம். அதனால் தமிழ் படங்களில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மமிதா பைஜு வலம் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் காண