US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. தூள் கிளப்பும் டிரம்ப்.. ஷாக்கான அதிபர் பைடன்!

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்:

பைடனை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர். சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்க தேர்தலில் நிற்க முடியும்.

ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐநாவுக்கான முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர்.

குடியரசு கட்சியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் அதிபர் தேர்தலில் இருந்து விலகினர். போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து இருவரும் டிரம்ப்-க்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்ந்து மாஸ் காட்டும் டிரம்ப்:

அயோவா மாகாணத்தை தொடர்ந்து நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலிலும் டிரம்பே வெற்றிபெற்றிருந்தார். அந்த வரிசையில், நெவாடா மாகாண உட்கட்சி தேர்தலிலும் டிரம்பே வெற்றிவாகை சூடியுள்ளார். டிரம்பை தவிர்த்து முக்கிய வேட்பாளர்கள் யாரும்  நெவாடா உட்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.

குறிப்பாக, டிரம்பின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் நிக்கி ஹேலி, நெவாடா மாகாண உட்கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராவதற்கு 1,215 கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தேவை. தற்போது, டிரம்புக்கு 60 கட்சி நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நிக்கி ஹேலிக்கு 17 கட்சி நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது.

நெவாடா மாகாணத்தை பொறுத்தவரையில், ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்புக்கு சாதகமாக உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக நிக்கி ஹேலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உட்கட்சி தேர்தலிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்புகளிலும் டிரம்ப் முன்னிலை வகித்து வரும் போதிலும், சட்ட ரீதியாக பல சவால்களை சந்தித்து வருகிறார். அவருக்கு எதிராக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற டிரம்ப் சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

Source link