இன்னும் 22 நாள்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச பிரச்னையாக மாறிய கெஜ்ரிவால் விவகாரம்:

கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு கைதுகளும் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் கெஜ்ரிவால் கைதை கண்டித்துள்ளனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்:

கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த வழக்கிலும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "கெஜ்ரிவால் கைதை கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான, காலதாமதம் இல்லாத வகையில் வழக்கு நடத்தப்படும் என்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

கெஜ்ரிவால் விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தற்காலிக தலைமை துணை தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு அரசுகள் மரியாதை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சக ஜனநாயக நாடுகளின் விவகாரத்தில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் அது ஆரோக்கியமற்ற முன்னுதாரணங்களுக்கு வழிவகுக்கும். இந்தியாவின் சட்ட நடைமுறைகள், சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை. எந்த வித பாரபட்சமும் இன்றி, சரியான நேரத்தில் முடிவுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அதை விமர்சிப்பது தேவையற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
onion dark website dark websites
dark web marketplaces bitcoin dark web
darknet markets 2026 darknet drugs
dark market onion darkmarket url
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு குறைப்பு: Z+ இலிருந்து Z பிரிவுக்கு மாற்றம்|Why Was Stalin’s Z+ Security Cover Reduced? | ACTPnews.com

திருப்பத்தூர்: புதன் சந்தையை நாற்றமடிக்க வைக்கும் கோடியூர் ஏரி – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?| Tirupathur: Kodiyur Lake Stench Hits Wednesday Market – Will Municipality Act | ACTPnews.com

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது! – மரபுகளை மாற்றச் சொல்கிறார் பழனிவேல் தியாகராஜன் | ACTPnews.com

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன? | The Government of Nepal, which had refused international aid, has reversed that decision. | ACTPnews.com

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com

total goals nottingham forest betting odds tips