Indian Cricket Team Have Chance To Win Icc Trophy Here Know Latest Tamil Sports News

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன் டிராபியை வென்றது. அதன்பிறகு இந்திய அணி  எந்தவொரு ஐசிசி நடத்திய போட்டிகளிலும் கோப்பையை வெல்லவில்லை. 
இந்தநிலையில், தற்போது மீண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கும் ஐசிசி கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அடுத்த 15 மாதங்கலில் 3 ஐசிசி போட்டிகளில் விளையாடுகிறது. இதில், வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை அடங்கும். 
11 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் இந்திய அணி: 
மார்ச் முதல் மே வரை நடைபெறும் ஐபிஎல் சீசன் 17 ஐ தொடர்ந்து டி20 உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மண்ணில் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை வெல்வதன் மூலம் 11 ஆண்டுகால வறட்சியை போக்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்குப் பிறகு, அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தப்பட உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது.
ஐசிசி போட்டிகள் மீது இந்திய அணி கண்: 
2024-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு நடைபெறும். 2024-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 2025ம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தவுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 மாதங்களில் 3 ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இருப்பினும், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வதன் மூலம் 11 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வருமா இல்லையா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
டி20 உலகக் கோப்பை எப்போது..? 
டி20 உலகக் கோப்பை போட்டி வருகின்ற ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. 
இந்த போட்டிக்கான அணியை அறிவிக்க ஐசிசி கெடு விதித்துள்ளது. அனைத்து அணிகளும் மே 1ம் தேதிக்குள் தங்கள் அணியை அறிவிக்க வேண்டும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, பிசிசிஐ இந்திய அணியை மே 1 ஆம் தேதி அறிவிக்கலாம்.
இந்த முறை ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கவுள்ளது . எனவே, ஐபிஎல் போட்டியில் வலுவாக விளையாடி வரும் வீரர்களும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அணி மாற மே 25 வரை அவகாசம் அளிக்கப்படும். எனவே ஐபிஎல் 2024 போட்டியின் இறுதி வரை டி20 உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து 20 அணிகளின் வீரர்களின் பட்டியல் வெளியாகும். 
சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஒரு நிகழ்வில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்றும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என அறிவித்தார். 

Source link