t20 world cup 2024 virat kohli may not set his place in t20 world cup 2024 even play well ipl 2024 explained


தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி, இந்திய அணிக்காக கடந்த 2 மாதத்திற்கு மேலாக விளையாடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், டி20யில் அன்ஃபிட் என கூறப்பட்டு வந்து விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். 

Monday King Plays 🔥🐐#ViratKohli𓃵pic.twitter.com/3b2RIM7jxr
— A D V A I T H (@SankiPagalAwara) March 25, 2024

டி20 உலகக் கோப்பை 2024ல் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விளையாட உள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி இடம் பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், டி20 வடிவத்தில் தனது அணியை வெற்றிபெறச் செய்யும் சக்தி தன்னிடம் இன்னும் இருப்பதாகவும், ஆனால் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, டி20 உலகக் கோப்பையில் தனக்கு இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்று கோலி சமீபத்தில் கூறினார். 
இந்திய அணியின் யார் யாருக்கு வாய்ப்பு..? 
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து, ரோஹித் சர்மாவின் இடம் உறுதியானது. இவருடன் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம். இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு 33க்கும் அதிகமாக ஆவ்ரேஜில் ரன்களை எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே களமிறங்கலாம். அதேசமயம், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு போட்டியிடலாம். 
7வது இடம் ஒரு ஆல்ரவுண்டருக்கு என்பதால் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடிக்க மோதல் இருக்கும். இந்திய அணியில் பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம்பெறலாம். 
விராட் கோலி ஒருவேளை வந்தால் யாருக்கு சிக்கல்..?
5 பந்துவீச்சாளர்களுடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி களமிறங்குவது ஆபத்தாக மாறிவிடலாம். குறைந்தது ஒரு அணிக்கு 6 அல்லது 7 பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவது நல்லது. எனவே, இந்திய அணி சரியான வகையில் ஆல்-ரவுண்டர்களை தேர்வு செய்வது அவசியம். இதுபோக, விராட் கோலி விளையாடும் பிளேயிங் 11 அணியில் இடம்பிடித்தால் ஒரு முக்கிய பேட்ஸ்மேன் வெளியேற வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ரிங்கு சிங் வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த இரண்டு வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். அதனால், இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விராட் கோலியை இந்திய தேர்வுக்குழு எடுக்க யோசிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 
ஐபிஎல்லில் விராட் கோலி யார்..? 
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார் . அவர் 239 போட்டிகள் மற்றும் 230 இன்னிங்ஸ்களில் 37.24 சராசரி மற்றும் 130.02 ஸ்ட்ரைக் ரேட்டில் 7,284 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் அவரது சிறந்த ஸ்கோர் 113 ஆகும். மேலும் கோலி ஏழு சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடித்துள்ளார் .

மேலும் காண

Source link