Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here | TN Headlines: பரபரப்பாகும் தேர்தல் களம்; தலைவர்களின் தீவிர பரப்புரை


Kanimozhi MP: உலகிலேயே சட்டம் போட்டு ஊழல் செய்த ஆட்சி பாஜக – கனிமொழி எம்பி:
அவர் பேசுவையில், ”வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தலை போன்றதல்ல. இந்த தேர்தல் நமது உரிமையை பாதுகாக்ககூடிய ஒரு தேர்தல். ஆங்கிலேய காலக்கட்டத்தில் நமது உரிமைகள் உடமைகள் பறித்து எடுத்து சென்றதை போல் தமிழக வளங்கள் வரி ஜிஎஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
Election Awareness Video : தெளிவா சிந்திங்க.. தகுதியானவங்களுக்கு ஓட்டு போடுங்க.. வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேட்புமனு தாக்கல் முடிவடைந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முழுவீச்சில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க
Watch Video : கோவையில் வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை.. கைதட்டி உற்சாகப்படுத்திய வானதி சீனிவாசன்
கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, “முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். மேலும் படிக்க
EPS Campaign: சேலம் கடைவீதியில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி
சேலம் கடைவீதி பகுதியில் இருந்து துவங்கி சின்ன கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் பகுதி ஆகிய பகுதிகளில் வேட்பாளரை அழைத்துக் கொண்டு நடந்தே சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோரிடம் அதிமுக வேட்பாளர் விக்னேஷ்க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு கேட்டார். மேலும் படிக்க
TN CM Stalin Wishes: தேசத்துக்கான சேவையில், 33 ஆண்டுகள்.. மன்மோகன் சிங் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழுரை..!
கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ABP Nadu Exclusive : ”மோடியை தூக்கி எறியவேண்டிய நேரம் இது” : திருமாவளவன் ஆவேசம்
கடந்த தேர்தலில் இருந்து இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட பார்வை இருக்கிறது. வேட்பாளர்களை பார்த்தைவிட, கட்சியை பார்ப்பதை விட அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தொடர வைப்பதா? அல்லது தூக்கி எறிவதா? என்கிற கேள்விக்கான விடையை தேடுகிற காலமாக அமைந்திருக்கிறது.மேலும் படிக்க

மேலும் காண

Source link