நாளை மீண்டும் தொடங்கும் விவசாயிகள் பேரணி! போலீஸ் தடுப்புகளை முறியடிக்க புது வியூகம்!

விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

விவசாயிகள் வியூகம்:

நாளை முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லைக்கு வந்துள்ளது. போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மாபெரும் பேரணி:

இன்னும் ஏராளமான இயந்திரங்கள் விவசாயிகளால் டெல்லி எல்லைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் டிராக்டர் உள்பட விவசாயத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்களை மாற்றி வித்தியாசமாக எல்லைக்கு கொண்டு வருவதால், அதைப்பார்ப்பதற்காக தனியாக மக்கள் கூட்டம் கூடி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காலை 11 மணி வரை போலீசாருக்கு அவகாசம் அளித்துள்ளனர். இந்த மாபெரும் பேரணியை சம்யுக்தா கிசன் மோர்ச்சா நடத்துகின்றது.

விவசாயிகள் தங்கள் பேரணியை கைவிட அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.  மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Source link