தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் – “The GOAT” படத்தில் மிகவும் பிஸியாக வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின்னர் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகப் பரவியது.
விஜய் கட்டிய சாய்பாபா கோயில்
இதனிடையே நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் சென்னையில் அவர் கட்டிய சாய்பாபா கோயிலில் எடுக்கப்பட்டது என்றும், அது கொரட்டூரில் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சாய் பாபா மீது தீவிர பற்று கொண்டவர்கள் நடிகர் விஜய் மற்றும் அவரின் பெற்றோர். சாய்பாபாவுக்காக ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது பல நான் ஆசையாக இருந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சில காலங்களுக்கு முன்னர் இருந்தே நடைபெற்றுள்ளது. அந்த வகையில் உதயம் தியேட்டர் அருகே ஒரு இடத்தில் சாய்பாபவுக்கு கோயில் கட்டுவதாக இருந்தது. ஆனால் மெட்ரோ திட்டம் அங்கே வர முடிவெடுக்கப்பட்டு இருந்ததில் பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.
ஷோபா சந்திரசேகர் மகிழ்ச்சி
கடந்த பிப்ரவரி மாதம் கொரட்டூரில் உள்ள வெங்கடேஷ்வரா நகரில் ‘சாயி மந்திர்’ என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஆலயம் ஒன்றை கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார் நடிகர் விஜய். அந்த சமயத்தில் இது பெரிய செய்தியாக வெளியில் வராமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானதும் தான் இந்தத் தகவல் வெளியில் வர துவங்கியுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஏராளமான சாய் பக்தர்கள் ‘சாயி மந்திர்’ கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது என கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார். சாய்பாபாவை வந்து தரிசித்து செல்வதால் மனம் அமைதி அடைகிறது என்பது கோயிலுக்கு வரும் பக்தர்களின் கருத்து. விரைவில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
‘ரொம்ப நாள் ஆசை.. நிறைவேற்றிய மகன்’
சாய்பாபா கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு இரண்டு முறை விஜய் கோயிலுக்கு வந்து சாய்பாபாவை தரிசித்து சென்றுள்ளார் என்றும், அடிக்கடி அவரின் பெற்றோர் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவராக இருந்த போதிலும் சாய்பாபாவுக்கு கோயில் கட்டும் எண்ணம் வந்ததற்கான காரணம் குறித்து அவரின் தாயார் ஷோபா சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ரொம்ப நாளாவே விஜய்கிட்ட நம்ம இடத்துல ஒரு பாபா கோயில் கட்டணும்னு சொல்லிட்டு இருந்தேன். அவர் கட்டிட்டாரு. எல்லாரும் எல்லா நன்மைகளும் அடைய பாபா கிட்ட வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஷோபா சந்திரசேகர்.
மேலும் காண

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…