ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு:

மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
 

 
இந்த தாக்குதலை கோர்சான் மாகாணத்தைச் சேர்ந்த ஐஎஸ்எஸ் பயங்கிர்வாத அமைப்பு நடத்தியதாக பொறுப்பு ஏற்றுள்ளது.  ஆனால், ரஷ்ய அரசு தெரிவிக்கையில் இத்தாக்குதலை நடத்தியவர்கள் உக்ரைனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா- யுக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில், அவர்கள் அண்டை நாட்டிற்குச் சென்று வருவதாகவும் கூறியுள்ளது. 
 
இதற்கிடையில்,  இத்தாக்குதலை நடத்தியதாக ISIS-K அமைப்பு கூறியது நம்பகமானது என்றும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன்  நாட்டுக்கு தொடர்பில்லை என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது . மாஸ்கோவில் கச்சேரிகள் உட்பட  மக்கள் கூடும் கூட்டங்களை குறிவைத்து “தீவிரவாதிகள்” தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக,  இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
 

11 people ‘directly’ involved in Crocus City Hall attack detained: Russian Security ServiceRead @ANI Story | https://t.co/5aezwo3Gp5#moscowattack #Russia pic.twitter.com/udYrwdRx7P
— ANI Digital (@ani_digital) March 23, 2024

துப்பாக்கி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் துப்பாக்கி தாக்குதலை தொடர்ந்து  இசை அரங்கில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறுகின்றனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தகவல் கூறுகையில், “மாஸ்கோவில் பல ஆண்டுகளில் நடக்காத அளவுக்கு மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும் என தெரிவித்தா.

இந்நிலையில் மாஸ்கோ இசை கச்சேரி அரங்கில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தொடர்பு உடையதாக 11 பேரை இன்று ( சனிக்கிழமை ) கைது செய்யப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாகவும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. 
 
இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற உலக தலைவர்கள் பலரும் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Also Read: Moscow Attack: உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்!

மேலும் காண

Source link