கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக, சென்னைக்கு, விமானத்தில் ரூ‌பாய் 35 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்த பயணியை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில், கைது செய்து, மேலும் விசாரணை நடைபெற்ற வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் போதை கடத்தல் தொடர்கிறதா ?

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னை வழியாக குஜராத் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதாவது வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து சென்னையில் இருந்து வேறு மாநிலங்களுக்கு.போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது. அவ்வப்பொழுது சென்னை விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரே நபரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் கூட சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று 28 கோடி இன்று 35 கோடி:

நேற்று ரூ. 28 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதலான நிலையில், இன்று மேலும் ரூ‌.35 கோடி மதிப்புடைய போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை, ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

3.5 கிலோ கொகைன் போதைப் பொருள்

எனவே அந்த பயணியை நிறுத்தி, விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருள் பார்சலை கண்டுபிடித்து வெளியே எடுத்தனர். அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி.இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்

இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? தஇந்த கோகைன் போதைப் பொருள், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதை கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/