தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்கச் சென்றுள்ளனர்
கேப்டன் மில்லர்
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. தொடரி, பட்டாஸ், மாறன் என தனுஷை வைத்து 3 படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, 4வது முறையாக தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷம் நிவேதா தாமஸ், அதிதி பாலன், ஷிவராஜ் குமார், ஜெயபிரகாஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை தனுஷ் நடித்தப் படங்களில் அதிக பட்ஜெட் சுமார் 80 கோடி செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
Terrific Performer #Dhanush 🔥🔥#CaptainMiller 💥🥵Kudos @dhanushkraja for his script selection. If this pace continues in 2nd half; Definitely it will be memorable film #CaptainMillerFDFS 🏆🏆🏆 pic.twitter.com/emQHGegluh
— 𝐀𝐥𝐥𝐚𝐫𝐢 𝐑𝐚𝐦𝐮𝐝𝐮 𝐍𝐓𝐑 (@AllariRamuduNTR) January 12, 2024
படம் பார்த்து மகிழ்ந்த தனுஷ் குடும்பத்தினர்
கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க தனுஷ் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு படையெடுத்து வரும் நிலையில் , நடிகர் தனுஷின் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தனது தந்தை நடித்துள்ள படத்தைப் திரையரங்கில் பார்த்து ரசித்து வருகிறார்கள். இருவரும் சென்னை ரோகினி திரையரங்கில் கேப்டன் மில்லர் படத்தைப் பார்க்க சென்றபோது எடுக்கப் பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.
#CaptainMiller FDFS 💥Thalaivar family enjoyed 🤍📸🔥🙌@RohiniSilverScr 🔥Welcome our @dhanushkraja in style ⚡💥@B_RAJA_ @DirectorS_Shiva @thiruvallur_DFC @theSreyas @WorldODFCOffl KILLER KILLER CAPTAIN MILLER full cast pic.twitter.com/52EDYjrr3Z
— N.Parthiban (@NSParthiban6) January 12, 2024
பொங்கல் வெளியீடுகள்
கேப்டன் மில்லர் படம் தவிர்த்து அருண் விஜய் நடித்துள்ள மிஷன் , சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் , விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்டப் படங்கள் இன்று வெளியாகி இருக்கின்றன. மேலும் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்கு இசையையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மேலும் படிக்க : Captain Miller Twitter Review: நடிப்பில் தெறிக்கவிட்ட தனுஷ்.. கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Ayalaan Twitter Review: காத்திருப்புக்கு கிடைத்ததா வெற்றி? சிவகார்த்திகேயனின் “அயலான்” ட்விட்டர் விமர்சனம் இதோ!