யுவன் ஷங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்
தி கோட் (The Goat)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். பிரபுதேவா, பிரஷாந்த் , சினேகா , லைலா, மோகன் , பிரேம்ஜி , வைபவ், மினாக்‌ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
விசில் போடு
தமிழ் புத்தாண்டை ஒட்டி இன்று தி கோட் படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி பாடல்வரிகளை எழுதியுள்ள நிலையில் நடிகர் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். 

#WhistlePodu 💛https://t.co/mrX0dKcjzz#GoatFirstSingle #TheGreatestOfAllTime ⁰⁰@actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @dhilipaction @actress_Sneha #Laila @meenakshiioffl… pic.twitter.com/A1olyVw6vN
— Archana Kalpathi (@archanakalpathi) April 14, 2024
கடந்த ஆண்டு லியோ படத்தின் நான் ரெடி பாடல் விஜயின் அரசியல் வருக்கை அச்சாரமாக அமைந்தது. அதே போல் இந்த முறை விசில் போடு பாடல் வெளியாகியுள்ளது . ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்கிற முதல் வரியிலேயே விஜயின் அரசியல் பாடலில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. 
மேலும் பாடலில் விஜயுடன்  பிரபுதேவா , பிரஷாந்த் முதலியவர்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்கள். மூன்று நடிகர்களும் நடனத்தில் அசத்துபவர்கள் என்பதால் இந்தப் பாடலின் வீடியோ நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் . 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports