கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 600 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த இடத்தில் 450க்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருத்தொண்டர் திருச்சபை தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
கோவில் நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் சொத்து, கோயில்களுக்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் காண