தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. நீரை திறந்து விடுங்கள்


தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வதில் பல காலமாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. காவிரி நதிநீரை நம்பி இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர்:
இரு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலின்றி நதிநீரை பங்கீட்டுக் கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதில் இரு மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு எந்தளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடும்.
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு பிறகு நடந்த இந்த கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அரசுகளின் பிரதிநிதிகள் மட்டுமின்றி கேரளா, பாண்டிச்சேரி மாநில பிரதிநிதிகளாக அந்தந்த மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நடப்பு பிப்ரவரி மாதத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்:
இந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான பரிந்துரைகளை காவிரி நீர் ஒழுங்காற்று குழு வழங்கி வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிப்ரவரி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள நீர்மட்டத்தின் அளவு முக்கிய பங்குவகிக்கிறது. கர்நாடக காவிரி மீன்பிடி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், அங்கு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். அந்த காலகட்டங்களில் தமிழ்நாடு எதிர்பார்க்கும் அளவிற்கு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடும். மற்ற காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் போதியளவில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறந்துவிடுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் படிக்க: Tamil Nadu Budget: பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
மேலும் படிக்க: நிம்மதி.. 6 மாதங்களில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம்; தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதி

மேலும் காண

Source link