வந்தே பாரத் ரயில்கள் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரங்கள் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் அதிக தூரமுள்ள உள்ள இடங்களின் பயணம் நேரமானது குறைந்துள்ளது. இந்நிலையில் குறைந்த தூரங்களுக்கு இடையேயான இடங்களை இணைக்கும் வகையில், வந்தே மெட்ரோ திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
குறைந்த தூரங்களுக்கு வந்தே மெட்ரோ:
வந்தே மெட்ரோ ரயில்கள் ரயில்கள் செயல்பாட்டுக்கு வந்தால் 100 முதல் 200 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க சில மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக சில நிமிடங்களில் பயணம் முடிந்துவிடும். இந்திய ரயில்வேயானது, குறுகிய தூரங்களுக்கு இடையிலான வந்தே மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டத்தை வரும் ஜூலை மாதமே தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அடுத்த மாதமே, இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
Also Read: ATVM Machine: ரயில் டிக்கெட் எடுக்க ATVM: வரிசையில் நிற்க தேவையில்லை; எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?
வந்தே மெட்ரோ ரயில்கள் 100 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான வழித்தடங்களிலும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வழித்தடங்களிலும் இயக்கப்படும். வந்தே மெட்ரோ ரயில்கள் சுமார் 124 நகரங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பிடதக்க வழித்தடங்களான திருப்பதி-சென்னை லக்னோ-கான்பூர், ஆக்ரா-மதுரா, டெல்லி-ரேவாரி, புவனேஸ்வர்-பாலசோர் மற்றும் ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
புதிய வந்தே மெட்ரோ ரயில்கள் முழுக்க முழுக்க ஏசி கொண்டதாக இருக்கும் மற்றும் தற்போதுள்ள ரயில் பாதைகளில் மட்டுமே இயக்கப்படும். பெரிய நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் செயல்படும். ஒவ்வொரு ரயிலிலும் 12 பெட்டிகள் இருக்கும் மற்றும் பெட்டிகளின் கதவுகள் பெரியதாகவும் தானியங்கியாகவும் இருக்கும். மேலும், கோச்சுகளில் நிற்க அதிக இடவசதி இருக்கும். தேவைப்பட்டால், இந்த ரயில்களில் 16 பெட்டிகளையும் நிறுவப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண