Rohit Sharma Needs 44 Runs Become Leading Run Getter By An India Captain In T20i History

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நாளை அதாவது வியாழக்கிழமை முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். தற்போது இந்த சாதனை முன்னாள் கேப்டன் விராட் கோலி பெயரில் உள்ளது. 
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குபிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இடம்பெறவில்லை. 
ரோஹித் சர்மா இன்னும் 44 ரன்கள் எடுத்தால்..?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்தால், ரோஹித் சர்மா விராட் கோலியின் முக்கியமான சாதனையை முறியடிக்க முடியும். சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனை தற்போது விராட் கோலியின் பெயரில் உள்ளது. கோலி இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 50 போட்டிகளில் 1570 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 1527 ரன்கள் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில், முதல் டி20யில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20யில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.  
ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் நம்பர்-1:
சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு வருவார். இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் முதலிடத்தில் உள்ளார். ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 2236 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் பாபர் அசாம் 2195 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் பெயரில் 2042 ரன்கள் உள்ளது.  
எம்.எஸ். தோனி சாதனையை சமன் செய்ய வாய்ப்பு:
ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 39 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் எம்எஸ் தோனி 72 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். வரவிருக்கும் T20I தொடரில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஸ்வீப் செய்தால், ஆண்களுக்கான T20I போட்டிகளில் அதிக வெற்றிகரமான இந்திய கேப்டனாக தோனியை ரோஹித் சமன் செய்வார்.
இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்கள்:

 

Source link