Israel Iran War Reason What is The Conflict Between Iran and Israel EXPLAINED in Tamil | Israel Iran War Reason: இடத் தகராறில் ஆரம்பித்தது இருநாட்டு போராக உருவெடுப்பு.. இஸ்ரேல்


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாம் உலக போரை கூட உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ஜென்ரல் உள்பட 12 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் உறுதியாக சொல்லுகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று இரவு வடக்கு இஸ்ரேலை நோக்கி சுமார் 200க்கு அதிகமாக ட்ரோன் மற்றும் ஏவுகணை அனுப்பியது. இருப்பினும், இந்த தாக்குதலை  முறியடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. 
இருப்பினும், அடுத்த 24 முதல் 48 மணிநேரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மிகப்பெரிய பதிலடி தாக்குதலை நடத்தும் என்று நம்பப்படுகிறது. ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், ஈரானுக்கு ஈராக், சிரியா, லெபனான், துருக்கி, கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 
இந்நிலையில், ஈரானுக்கு – இஸ்ரேலுக்கு என்ன நடக்கிறது. எதனால் இந்த சண்டை மூண்டது என்ற அனைத்து தகவலையும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு நீண்டகால புவிசார் அரசியல் போராட்டமாகும். 
ஷியா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த ஈரான், இஸ்ரேலுடன் இணக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1979 இல் அயதுல்லா கொமேனியின் கீழ் இஸ்லாமிய குடியரசைக் கொண்டு வந்த ஈரானியப் புரட்சியைத் (கடவுளின் கட்சி – ஹிஸ்புல்லா) தொடர்ந்து, ஈரான் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்து கொண்டது. இந்த ஈரானியப் புரட்சி படையே ஹிஸ்புல்லா என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஈரானிய தலைமையால், இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகளாலும், பாலஸ்தீனிய விடுதலை இயக்கங்களுக்கான ஆதரவாலும் தூண்டப்பட்டு, இஸ்ரேலிய அரசின் எதிரியாக உருவெடுக்க தொடங்கியது ஈரான். 
தொடங்கிய மோதல்: 
கடந்த1978ம் ஆண்டு தெற்கு லெபனானை இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்ததை எதிர்த்தது ஹிஸ்புல்லா அமைப்பு. அன்று உருவெடுத்த போராட்டம் இன்று வரை தொடர்கிறது. அதனை தொடர்ந்து ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பு வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு கடந்த 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ரூட்டில் உள்ள அதன் மரைன் தலைமையகத்தை அழித்து 241 வீரர்களை கொன்றது. அதை தொடர்ந்து, மீண்டும் கடந்த 1983ம் ஆண்டு அமெரிக்கத் தூதரகம் மற்றும் 1984 இல் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு கொடூர தாக்குதல் நடந்தது. இது அனைத்திற்கும் ஹிஸ்புல்லா அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டது. அன்றுமுதல் அமெரிக்கா, ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருத தொடங்கியது. அதன் காரணமாகவே, இஸ்ரேலுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தது அமெரிக்க வெள்ளை மாளிகை.
தொடர்ந்து, 1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள யூத சமூக மையம் ஒன்றில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு என அனைத்தும் ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2000ம் ஆண்டு தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பிறகும், அது ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முடிவிலா போரை நடத்தியது. இந்த மோதலின்போது ஹிஸ்புல்லா அமைப்பு சுமார் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் வீசி அச்சுறுத்தியது. 
ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி எப்படி கிடைக்கிறது…? 
ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு முக்கியமான ஆயுதங்கள், பயிற்சிகள் மற்றும் நிதியுதவிகளை ஈரான் வழங்குகிறது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அனுப்புகிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 
இந்தநிலையில்தான், ஈரானின் முழுமையான ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் காண

Source link