பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கரூரில் காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அதில் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்து சீல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தினை கரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் காண