சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகனாகி விட வேண்டும் என ஏராளமான கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர் கொஞ்சம் தான். ஆனால், ஒரு சிலர் நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு தனித்து தெரிவது என்பது அவர்களின் கடுமையான உழைப்புக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம். அப்படி பல போராட்டங்களை எதிர்கொண்டு இன்று வெற்றியாளனாக திகழும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி.
ப்ரேக்கிங் தந்த வெண்ணிலா கபடி குழு:க்ளீனராக, பெயிண்டராக, எலெக்ட்ரீஷனாக சினிமாவில் வாழ்க்கையை ஆரம்பித்த சூரிக்கு முதலில் ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன் முதலில் ஒரு கேரக்டராக அறிமுகமானது 2009ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் தான். பரோட்டா சாப்பிடும் போட்டியை வைத்து காமெடி சீன் ஒன்று இடம்பெற்று இருக்கும். அது இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதற்கு பிறகு அவர் பரோட்டா சூரி என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். சிவகார்த்திகேயன் உடன் சூரி நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் அவருக்கு நல்ல ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் படமாக அமைந்தது.
காமெடியன் டூ ஹீரோ:
நடிகர் சூரியின் வித்தியாசமான வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என வித்தியாசம் காட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படிப்படியாக முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை வெகு சிறப்பாக பயன்படுத்தி கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நெருங்கி வருகிறார் சூரி. அவரின் இத்தனை ஆண்டு கால போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
சீரியலில் சூரி:
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியின் பிளாஷ் பேக் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான ‘திருமதி செல்வம்’ தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. கதாநாயகன் சஞ்சீவ் நடத்தி வரும் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனாக நடித்திருந்தார் சூரி. அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உழைப்பும் திறமையும் இருந்தால் ஒருவரால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் நடிகர் சூரி. தற்போது விடுதலை பார்ட் 2 , கருடன், கொட்டுக்காளி, அடமெண்ட் கேர்ள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காண