திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 30ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் ”வேலைவாய்ப்பு முகாம்” இம்மாதம் எதிர்வரும் 30.01.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கல்வி தகுதி;
இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
அடையாள அட்டை நகல்கள்;
முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Job Alert: நர்சிங் படித்தவரா?ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

























A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…