7 Am Headlines today 2024 March 31st headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற, மத்திய அரசின் உதவிகளோடு நடவடிக்கை எடுக்கப்படும் – ஓ.பன்னீர் செல்வம்
பிரதமர் மோடியின் கண்களில் வரும் கண்ணீரை, அவரது கண்களே நம்பாது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் மாநில நிர்வாகி தடா பெரியசாமி; தமிழகத்தில் கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார் அண்ணாமலை என குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கு ரூ.2000 லஞ்சம் கொடுத்ததாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு
மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜியின் உடன் தகனம்; அவரது கண்கள் தானம்
தங்கம் விலையில் திடீர் மாற்றம்; சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்தது

இந்தியா: 

தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு 3 நாள் முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க மத்திய அரசு அனுமதி – ஆர்டிஐ மனுவில் தகவல்
ரூ.1823 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி மெகா பேரணி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கெஜ்ரிவால் விவகாரத்தில் உலக நாடுகள் கருத்து: சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தரத் தேவையில்லை என குடியரசு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்ணிற்கு ஏதேனும் மிரட்டல் வந்தால், எந்த தகவலையும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தோன்றும் சூரிய கிரகணம் இந்தியாவில் காண இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்: 

நேபாளத்தில் டாக்ஸி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு.
பாலியல் தொழிலில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள் – தலிபான்கள் எச்சரிக்கை.
பலுசிஸ்தானில் கனமழையால் மேற்கூரை இடிந்து விபத்து – 5 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு.
மடகாஸ்கரில் கனமழை; வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு.
ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

ஐபிஎல் 2024: ஹாட்ரிக் வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – டெல்லியுடன் இன்று மோதல்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஐபிஎல் 2024: இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. 
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Published at : 31 Mar 2024 06:59 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link