தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக மாஸ் காட்டி வருபவர் நடிகர் விஜய். கோலிவுட் சினிமாவை பொறுத்த வரையில் பாக்ஸ் ஆபீஸ் ராஜாவாக வலம் வரும் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னரே வியாபாரமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ மற்றும் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படம், இரண்டுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் வேட்டையாடியது. உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் 600 கோடி வசூல் செய்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லியோ படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட்டானார் நடிகர் விஜய். GOAT என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக விஜய் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் தான் தன்னுடைய கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்து அறிக்கைகளையும் அதன் கட்டமைப்பு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் GOAT மற்றும் ஒப்பந்தமாகியுள்ள மற்றுமொரு படத்தோடு நடிப்பதில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தார். மேலும் 2026ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்துடன் நேரடியாக களத்தில் மோதியது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம். தில் ராஜு தயாரிப்பில் மிகவும் பில்ட்அப்புடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது வாரிசு படம். தெலுங்கு இயக்குநருடன் விஜய் கைகோர்த்த முதல் படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் என மிக பெரிய திரைப்பட்டாளம் நடித்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மேலும் ‘வாரிசு’ படத்தில் வம்சியின் மேக்கிங் மற்றும் விஜய்யின் நடிப்பு சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த படத்திற்காக இவ்வளவு பெரிய பில்ட் அப் என நெட்டிசன்கள் வறுத்து தள்ளினர். படுதோல்வியை சந்தித்த ‘வாரிசு’ படத்தால் வம்சி பைடிபள்ளி பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் ஒட்டுமொத்த இமேஜையே டேமேஜ் செய்து விட்டது வாரிசு திரைப்படம் என கூறப்படுகிறது.
வம்சி பைடிபள்ளி அடுத்த படத்திற்காக எந்த ஹீரோவை அணுகினாலும் அவர்கள் ஏதாவது சாக்கு சொல்லி தட்டி கழிக்கவே பார்க்கிறார்களாம். அதனால் ஏதாவது ஒரு ஹீரோவை வைத்து எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயத்தில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம் வம்சி.
மேலும் காண