Twitter Down: எக்ஸ் தளம் முடக்கம்.. செய்வதறியாமல் திணறும் எலான் மஸ்க்.. என்னதான் பிரச்னை?

Twitter Down: உலகின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ் தளம் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) முடங்கிய சம்பவம் பெரும் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர் குழப்பம் அடைந்தனர்.

சமூக வலைதளங்களின் வளர்ச்சி:

வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளது.

வரும் 2027ஆம் ஆண்டுடன் அந்த எண்ணிக்கை 5.85 பில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 143 நிமிடங்கள் வரை சமூக வலைதளத்தை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Source link