தி கோட் படத்தின் விசில் போடு பாடலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
தி கோட் ( The GOAT)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். பார்ட்டி ஒன்ன தொடங்கட்டும்மா என்று எடுத்த எடுப்பிலேயே தனது அரசியல் வருகையை நினைவுபடுத்துகிறார் விஜய். பிரஷாந்த் , பிரபுதேவா , அஜ்மல் , விஜய் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்தப் பாடலில் வெறித்தனமாக நடனமாடி கலக்கியிருக்கிறார்கள்.
விஜய் படத்தில் அஜித் பட ரெஃபரன்ஸ்
#WhistlePodu 💛https://t.co/mrX0dKcjzz#GoatFirstSingle #TheGreatestOfAllTime ⁰⁰@actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @dhilipaction @actress_Sneha #Laila @meenakshiioffl… pic.twitter.com/A1olyVw6vN
— Archana Kalpathi (@archanakalpathi) April 14, 2024
பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் தனித்துவமான சில சேட்டைகளை செய்துவைப்பார் வெங்கட்பிரபு. அதேபோல் இந்த பாடலிலும் வெங்கட் பிரபு சில சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான முந்தையப் படங்களின் டைட்டில் கார்டுகளின் ஸ்டைலில் ’தி கோட்’ படத்தின் டைட்டிலை இந்தப் பாடலை சேர்த்திருக்கிறார்கள். சென்னை 28, சரோஜா , கோவா , மங்காத்தா , பிரியானி , மாஸ் , மாநாடு ஆகிய படங்களின் டைட்டில் கார்டுகள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அஜித் நடித்த மங்காத்தா படத்தின் டைட்டில் கார்டு இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
மேலும் காண