What happened to Jackie Chan Viral photo Actor Seshu Hospitalized march 15th Cinema Headlines | Cinema Headlines: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி


Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்!
‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு,  திரைப்படத்தின் பூஜை  வெகு விமர்சையாக நடைபெற்றது. இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நக்ஷா சரண் நடிக்கிறார்.  இப்பட தொடர்பாக செய்தியளர்களை சந்தித்த தயாரிப்பாளர் இளஞ்செழியன் இது சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் படிக்க
Jackie Chan: ஜாக்கிசானுக்கு என்ன ஆச்சு? – நொறுங்கிப்போன ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ!
பிரபல நடிகர் ஜாக்கிசான் ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுப்பவர். ஸ்டண்ட் மாஸ்டராக தனது திரை பயணத்தை தொடங்கிய ஜாக்கிசான் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
Lollu Sabha Seshu: காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?
நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க
Lingusamy :ஆன்மீக பாதையில் இயக்குநர் லிங்குசாமி… வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
தியானம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் தற்போது தியான பயிற்சியாளராக இருந்து வருகிறார்.  தியானம் குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் ஸ்பிரிச்சுவாலிட்டி நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் படிக்க
Manikandan about Life : 27 வயசுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும்.. மணிகண்டன் சொன்ன வாழ்க்கை தத்துவம் தெரியுமா?
நடிகர் மணிகண்டனின் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் வாழ்க்கை தத்துவம் குறித்த தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். 27 வயதிற்கு பிறகு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

மேலும் காண

Source link