ஓடும் ரயிலில் போலீஸ் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற காவலர்… பரபரப்பு…

மகாராஷ்டிராவில் ஓடும் அதிவிரைவு தொடர்வண்டியில் 4 பயணிகளை ஆர்பிஎஃப் காவலர் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு விரைவு தொடர்வண்டியில் பயணித்த சிடி சேத்தன் என்ற தொடர்வண்டி பாதுகாப்புப்படை காவலர் சிடி சேத்தன் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவின் பல்கார் தொடர்வண்டி நிலையத்தை, விரைவு தொடர்வண்டி கடந்த போது, பி5 பெட்டியில் 3 பயணிகள் மற்றும் ஆர்பிஎஃப் துணை சார்பு ஆய்வாளர் ஆகியோர் மீது, தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், 4 பேரும் உயிரிழந்ததுள்ளாதகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரை பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிகாலை 5.23 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், காவலர் சேத்தன், அந்த அதிவிரைவு ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், இருப்புப்பாதை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.