Pongal Awards: 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மூவாயிரத்து 184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் தரப்பட உள்ளன. காவலர், காவலர் நிலை – 1, சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. தீயணைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 59 பேருக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கம் வழங்கப்பட உள்ளது. காவல் வானொலி, மோப்ப நாய் படை, காவல் புகைப்பட கலைஞர் பிரிவில் பணியாற்றும் 6 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதந்திர பதக்கபப்டியாக பிப்ரவரி 1ம் தேதி முதல், நிலை வேற்பாடின்றி 400 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

























поверка теплосчетчика телефон сколько стоит поверка теплосчетчика