நாமக்கல்லில் தனியார் தங்கும் விடுதியின் 2-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் ராமாபுரம் புதூர் செல்லும் வழியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, மதுரையை சேர்ந்த அய்யனார் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக விடுதியின் 2-வது மாடியில் உள்ள அறை எண் 15-ல் தங்கி, நாமக்கல்லில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே நேற்று நள்ளிரவு விடுதியில் மது அருந்திவிட்டு, செல்போனில் பேசிக் கொண்டிருந்த அய்யனார், 2-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சென்ற சென்ற காவல்துறையினர், அய்யனாரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், 2-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததும், அப்போது மின்சார ஒயர்கள் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியதால் படுகாயம் அடைந்து இறந்ததும் தெரியவந்தது.
அதே நேரத்தில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.