நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில், கொல்கத்தா அணி 19 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எளிதான வெற்றிக்கு பிறகு, கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல், தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2024ல் 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும்.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில், கொல்கத்தா அணி தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை குவித்து தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம், அந்த அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும், அந்த அணியின் நிகர ரன் ரேட் +1.047 ஆக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியின் நிகர ரன்-ரேட் +1.979 ஆக உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியால் கிடைத்த 2 புள்ளிகளுடன் -0.711 என்ற நிகர ரன்-ரேட்டுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணி நான்காவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா ஒரு இடம் சரிந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு வந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தற்போது முறையே 4 மற்றும் 2 புள்ளிகளை பெற்றுள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் தற்போது 2 போட்டிகளில் 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 2 ஆட்டங்களில் ஒரு வெற்றியை பதிவு செய்து, தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2024ல் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால், புள்ளிப்பட்டியலில் இன்னும் அந்த அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கவில்லை. நிகர ரன் ரேட் அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி, அதில் தோல்வியடைந்துள்ளது. தற்போது கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆரஞ்சு கேப்:
எண்
பேட்ஸ்மேன்
அணி
ரன்கள்
போட்டிகள்
அதிகபட்ச ஸ்கோர்
4s
6s
சதம்
அரைசதம்
1
விராட் கோலி
ஆர்சிபி
181
3
83
15
7
–
2
2
ஹென்ரிச் கிளாசென்
எஸ்.ஆர்.ஹெச்
143
2
80
4
15
–
2
3
ரியான் பராக்
ஆர்.ஆர்
127
2
84
8
9
–
1
4
சஞ்சு சாம்சன்
ஆர்.ஆர்
97
2
82
6
6
–
1
5
அபிஷேக் சர்மா
எஸ்.ஆர்.ஹெச்
95
2
63
7
9
–
1
6
திலக் வர்மா
எம்.ஐ
89
2
64
3
7
–
1
7
தினேஷ் கார்த்திக்
ஆர்சிபி
86
3
38
6
7
–
–
8
சாம் கர்ரன்
பி.கே.எஸ்
86
2
63
9
1
–
1
9
சிவம் துபே
சிஎஸ்கே
85
2
51
6
6
–
1
10
பில் சால்ட்
கே.கே.ஆர்
84
2
54
5
5
–
1
பர்பிள் கேப்:
எண்
பந்து வீச்சாளர்
அணி
விக்கெட்கள்
போட்டிகள்
சிறந்த பந்துவீச்சு
4-Fers
1
முஸ்தாபிசுர் ரஹ்மான்
சிஎஸ்கே
6
2
4/29
1
–
2
ஹர்ஷித் ராணா
கே.கே.ஆர்
5
2
3/33
–
–
3
ஆண்ட்ரே ரஸ்ஸல்
கே.கே.ஆர்
4
2
2/25
–
–
4
ஹர்ப்ரீத் ப்ரார்
பி.கே.எஸ்
3
2
2/13
–
–
5
ஜஸ்பிரித் பும்ரா
எம்.ஐ
3
2
3/14
–
–
6
யுஸ்வேந்திர சாஹல்
ஆர்.ஆர்
3
2
2/19
–
–
7
ககிசோ ரபாடா
பி.கே.எஸ்
3
2
2/23
–
–
8
குல்தீப் யாதவ்
டிசி
3
2
2/20
–
–
9
டி நடராஜன்
எஸ்.ஆர்.ஹெச்
3
1
3/32
–
–
10
தீபக் சாஹர்
சிஎஸ்கே
3
2
2/28
–
–
மேலும் காண