7 Am Headlines today 2024 april 1st headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக்கூடாததை எல்லாம் மோடி செய்கிறார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய விவகாரம்; தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக தேசிய போதை தடுப்பு பிரிவு சம்மன்
புதுச்சேரியில் கால்வாயில் தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை
ஒரு ட்ரியல்லியன் டாலர் பொருளாதரத்தை எட்டுவதே தமிழ்நாட்டின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் இயற்றியதாக கூறி ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுமையாக உணர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மீண்டும் மோடி ஆட்சி வந்த பிறகு அரியலூர் – நாமக்கல் ரயில் போக்குவரத்து சேவை நிச்சயமாக தொடங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
இரட்டை இலைக்கு வாக்களிப்பது மோடிக்கு வாக்களிப்பதற்கு சமம் என்று சேலம் தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி பரப்புரையில் பேசினார்.
தேர்தலுக்கு பிறகு பாஜகவின் அடையாளமே இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்தியா: 

நிலத்தகராறில் சமரசம் செய்ய வந்த காவல்துறையினரை துரத்தியடித்த பழங்குடியின மக்கள் – தெலங்கானாவில் பரபரப்பு
வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்து ரூ. 1930க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை இன்று முதல் அமல் படுத்தியது மத்திய அரசு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு 6வது முறையாக பிரதமர் மோடி 9ம் தேதி வருகிறார் – சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 
இரு மாநில முதலமைச்சர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிங்ஸிங்’; டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில் 10 பாஜக எம்.எல்.ஏக்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

உலகம்:

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை – பாகிஸ்தான் அதிரடி.
சிரியாவில் நோன்பு முடித்து ஹாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்.
அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
மெக்ஸிகோவில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு. 

விளையாட்டு: 

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2024: இன்று மும்பை அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி- முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி

Published at : 01 Apr 2024 06:55 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link