7 AM Headlines: பொங்கல் தொகுப்பு முதல் ஸ்பெஷல் ட்ரெயின் வரை… உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ..!

தமிழ்நாடு:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரூ. 1000 பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

பொங்கல் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவதா என உயர்நீதிமன்றம் கேள்வி; பஸ் ஸ்டிரைக் திடீர் வாபஸ் – இன்று முதல் பணிக்கு திரும்புவதாக தொழிற்சங்கண்க்கள் உறுதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்

நாட்டை 10 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட மோடியை மீண்டும் பிரதமராக வேண்டும்; மக்களவை தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டி – திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இன்று மற்றும் 12 ஆம் தேதி,  தமிழகத்தில்    ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

இந்தியா:

ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது – மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க குஜராத் நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தி தனது நீதியாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி

அயோத்யா ராமர் கோயிலுக்கு வந்த 108 அடி உயர ஊதுவத்தி பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதாரத்தின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம்:

கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவு 2023 ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது.

இந்தியக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் கப்பலான ஐஎன்எஸ் கப்ராவை இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது இந்தியா.

இந்திய உடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகப்படியான சுற்றுலா பயணிகளை அனுப்பும்படி சீன அரசுக்கு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கோரிக்கை விடுத்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு:

ப்ரோ கபடி லீக்: உபி யோதாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றிபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டி: விராட் கோலி திடீர் விலகல்.

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link