PKL 2023- 2024 Puneri Paltan vs Tamil Thalaivas Head to Head Records Stats Match


ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கி விளையாடி வருகின்றது. களமிறங்கியுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் லீக் சுற்றில் மோதவேண்டும். ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 
தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றும் 11 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் உள்ளது. புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 45 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி நாளை அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி பலமான புனேரி பல்தான் அணியை எதிர்கொள்கின்றது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. 
தமிழ் தலைவாஸ் அணி மற்றும் புனேரி பல்தான் அணி இதுவரை நேருக்கு நேர் 10 முறை மோதியுள்ளது. 10 முறை மோதியதில் புனேரி பல்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதாவது புனேரி அணி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 3 முறை வென்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 
அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக புனேரி பல்தான் அணி 43 புள்ளிகள் எடுத்துள்ளது.  தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக புனேரி அணி எடுத்து மிகக் குறைந்த புள்ளிக் கணக்கு 26. அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி புனேரி பல்தான் அணிக்கு எதிராக 30 புள்ளிகள் எடுத்துள்ளது. அதேபோல் புனேரி அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகள் எடுத்ததுதான் மிகக் குறைந்த புள்ளிகள். 

Our சுள்ளான் always got our back!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 pic.twitter.com/AL01Zwcisu
— Tamil Thalaivas (@tamilthalaivas) February 10, 2024

நடப்பு ப்ரோ கபடி லீக்கில் புனேரி பல்தான் அணி 18 போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றி பெற்று, 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து, 3 போட்டிகளில் ட்ரா செய்துள்ளது. புனேரி அணி 76 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 
கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 9 வது ப்ரோ கபடி லீக்கின் அரையிறுதிப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பல்தான் அணியிடம் தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது. 
நடப்பு சீசனில் நடைபெற்ற லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி 29 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் எடுத்தது. கடந்த சீசன் அரையிறுதியிலும் இந்த சீசனில் முதலாவது லீக் போட்டியிலும் சந்தித்த தோல்விக்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுக்கும் என தமிழ் தலைவாஸ் அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு உள்ளனர். 

மேலும் காண

Source link