Indian Cricket Team Dominate In Under 19 World Cup Here Know Stats And Records List Here

Under 19 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர் 19 உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டி வருகின்ர ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால் இம்முறை தென்னாப்பிரிக்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது. இந்த போட்டியானது 16 நாடுகள் பங்கேற்கும் நிகழ்வாகும். இந்த போட்டியானது 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் பாபர் அசாம் போன்ற பல முக்கிய வீரர்கள் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர். 
இந்தநிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த அணி எத்தனை முறை வென்றது தெரியுமா? 
அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகமுறை இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த முறையும் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கும். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை இந்தியா அதிகபட்சமாக 5 முறை கைப்பற்றியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம்…
இந்திய அணி 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை  ஆஸ்திரேலியா இதுவரை மூன்று முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி, 1998, 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது. 
ஆண்டு வாரியாக பட்டத்தை வென்ற அணிகளின் விவரம்: 



ஆண்டு
சாம்பியன்
ரன்னர்-அப்
நடத்திய நாடு


1988
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா


1998
இங்கிலாந்து
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா


2000
இந்தியா
இலங்கை
இலங்கை


2002
ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து


2004
பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ்
வங்கதேசம்


2006
பாகிஸ்தான்
இந்தியா
இலங்கை


2008
இந்தியா
தென்னாப்பிரிக்கா
மலேசியா


2010
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
நியூசிலாந்து


2012
இந்தியா
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா


2014
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


2016
வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா
வங்கதேசம்


2018
இந்தியா
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து


2020
வங்கதேசம்
இந்தியா
தென்னாப்பிரிக்கா


2022
இந்தியா
இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ்

மற்ற அணிகள் எப்படி..? 
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது. அதன்படி, கடந்த 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று பாகிஸ்தான் அணி அசத்தியது. பாகிஸ்தான் அணிக்கு அடுத்தபடியாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

1998 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. 
2014 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்றது.
2016 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வென்றது,
2020 ம் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் பட்டத்தைக் கைப்பற்றியது.
இறுதியாக, இந்திய அணி கடந்த 2022 ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது

எனவே இந்த முறையும் இந்திய அணி நடப்பு சாம்பியனாக களம் இறங்கும்.
 

Source link