ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…

உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா திகழ்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு, செங்கோல் வழிபாடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மூன்றாவது முறையாக மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சி வரவேண்டும் என செங்கோல் உடன் வருகை தந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களும் சிவ செங்கோல் வழிபாடு நடைபெற்று வருகிறது என்றார்.

மீண்டும் மோடி வேண்டுமோடி என்று பதவி ஏற்க வேண்டும் என்று நாங்கள் செங்கோல் வழிபாடு செய்து வருகிறோம். மீண்டும் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவி தமிழர்களுக்கும் செங்கோல் ஆதினத்திற்கும் மிகவும் பெருமை செய்து உள்ளார்கள் பாரத பிரதமர் மோடியும் அமிர்தாவும். நம் நாட்டில் உள்ள அனைத்து அரசுகளும் செங்கோலை மையமாக வைத்து ஆட்சி செய்து உள்ளார்கள்.

உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா இருக்கிறது. உலக நாடு முழுவதும் தொற்று காலங்களில் துன்பத்தில் இருக்கும் போது இந்தியாவில் இருந்துதான் அவர்களுக்கான கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.

ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனால் அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதி சான்றோர்களும் அனைவருக்கும் பொதுவான ஜனநாயக நாடாக இந்த நாடு இருக்கிறது.

செங்கோல் இருக்கும் வரை யாருக்கும் அநீதி ஏற்பட வாய்ப்பு இல்லை. இங்கு உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருமே பாரத தாயின் குழந்தைகள். எல்லோரும் இந்த சொங்களை ஏற்றுக் கொள்வார்கள். யாருக்கும் அச்சுறுத்தலோ பாகுபாடு இல்லாமல் எல்லா மதத்திற்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மணிப்பூர் நடைபெற்று வருவது தவறு. அந்த தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி காலத்தில் 16 பெண்கள் நிர்வாணமாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். குக்கி இன மக்கள் அவர்கள் இந்தியர்கள் கிடையாது. அவர்கள் பர்மாவிலிருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் அங்குள்ள தமிழர்களை தாக்கினார்கள். மணிப்பூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை சிலர் வேண்டுமென்று தூண்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக கொடுமை நடந்தால் அவர்களின் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து ஊடுருவி கம்யூனிஸ்டுகள் கிறிஸ்துவ மிஷன் இதனை தூண்டி விடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வந்த அவரை பதில் சொல்ல விடாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் சந்திக்க தயார்.

இங்குள்ள திமுக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு உள்ள பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு தரட்டும்.

மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. திமுக கட்சியில் மகளிர் சென்று கேட்டுப் பாருங்கள். தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறதா என கேளுங்கள் பெண்களுக்கான உரிமை தொகை என்பது எல்லாருக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பல விதிமுறைகள் அதற்கு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் தமிழக முதலமைச்சர் மாற்றி மாற்றி பேசுவார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

 

கிறிஸ்துவர்களுக்கு மட்டும்தான் கனிமொழி எம்.பி.யாக இருக்கிறார். மற்ற இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கனிமொழி தான் தொழில் வளத்தை தடுப்பது மின்சாரத் தயாரிப்பை எதிர்ப்பது வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பது ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இவர்களுக்கு வேலையாக உள்ளது.

மணிப்பூர் பெண்களுக்கு எதிராக மெழுகுவர்த்தியை தூக்கிக்கொண்டு கனிமொழி வருவார். தென் மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்களின் அடிமையாக கனிமொழி இருக்கிறார. திமுக அரசு கொள்ளிக்கட்டையால் தலையால் சொரிகிறது. இதற்கான பாதிப்பு அவர்களுக்கே தெரியும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.