Up Ayodhya Ram Mandir Complex Will Be Fragrant With 3610 Kg Weight 108 Feet Length 3 Feet Height Incense Stick

Ayodhya Ram Mandir: அயோத்யா ராமர் கோயிலுக்கான 108 அடி உயர தூப குச்சியாது, குஜராத்திலிருந்து சிறப்பு டிரக் மூலம் கொண்டு வரப்பட்டது.
அயோத்யா ராமர் கோயில் குடமுழுக்கு விழா:
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 22 ஆம் தேதி ராமரின் சிலை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை  செய்ய உள்ளது. இந்த நிகழ்வு மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு ராம பக்தர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. நாட்டின் மூலை முடுக்கிலிருந்து அயோத்திக்கு சிறப்புப் பரிசுகள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு 108 அடி நீள தூபக் குச்சி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பு தூபக் குச்சி திங்களன்று பரத்பூர் வழியாக ஆக்ராவில் உள்ள ஃபதேபூர் சிக்ரி மற்றும் கிராவாலியை வந்தடைந்தன. அதனை வரவேற்க திரளான மக்கள் சாலையின் இருபுறமும் குவிந்து,  ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பினர். இதனால், தூபக் குச்சியின் பயணமானது ஊர்வலமாக மாறியது.

Scenes from Udaipur ..Grand welcome for 108 feet incense stick (Aggarbatti) being taken from Vadodara to Ayodhya.#AyodhyaRamMandir 🚩 pic.twitter.com/VYZ2bPfl6l
— MαverΐcҜ 🇮🇳 (@iMavvy_) January 9, 2024

108 அடி உயர தூபக் குச்சி:
3610 கிலோ எடை, 108 அடி நீளமும், சுமார் மூன்றரை அடி அகலமும் கொண்ட தூபக் குச்சி குவிந்த பக்தர்கள் மலர் தூவி அதனை வரவேற்றனர். வதோத்ராவில் தயாரிக்கப்பட்ட இந்த தூபக் குச்சி இறுதி வடிவம் பெற ஆறு மாதங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பிஹாபர்பாத்தில் சேர்ந்த நபர் இதன ராம்ர் கோயிலுக்கான பிரசாதமாக தயாரித்துள்ளார். தேசி பசுவின் சாணம், தேசி பசு நெய், தூபப் பொருட்கள், பூக்களின் சாறு, ஆயுர்வேதப் பொருட்கள் மற்றும் பல வகையான மூலிகைகளிலிருந்து இந்த தூபக் குச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தூபக் குச்சி சுமார் ஒன்றரை மாதத்திற்கு எரிந்து 50 கிலோமீட்டர் பரப்பளவில் நறுமணத்தைப் பரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உத்தரபிரதேச அரசு ஏற்பாடுகள்:
இதனிடையே, ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உத்தரபிரதேச அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக கூடார நகரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மூன்று வேளையும் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்யா நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Source link