Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
அந்த வகையில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
போனஸ் வழங்கும் பி.சி.சி.ஐ.:
இந்த நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி போனஸ் தொகையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.  4-வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்று விளையாடிய நிலையில், இனி வரும் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக போனஸ் அளிக்கப்பட உள்ளது.  
அதன்படி, இனி வரும் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் போனஸ் வழங்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பி.சி.சி.ஐ. மூலமாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என்று சமபளம் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் டெஸ்ட் தொடர்களில் சம்பளம் மட்டுமின்றி வருட கடைசியில் போனஸ் தொகையும் வீரர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 
 

Source link