top news India today abp nadu morning top India news January 31 2024 know full details



சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை – எவ்வளவு கட்டணம்? எத்தனை மணிக்கு தெரியுமா?

ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகருக்கு, தேவைக்கு ஏற்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கடந்த 23ம் தேதி முதல் பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய முனைப்பு காட்டுகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் ராமர் கோயிலுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். மேலும் படிக்க.,

மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட் – இன்று கூடுகிறது நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 9ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மேலும் படிக்க.,

மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுமா ஆபரண வரி விலக்கு? எதிர்பார்த்து காத்திருக்கும் நகை வியாபாரிகள்!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, குகை, லைன்மேடு, பனங்காடு, சிவதாபுரம், மணியனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் சேலம் வெள்ளி கொலுசுக்கு தனி மதிப்பு உண்டு. மற்ற இடங்களில் கொலுசு தயாரிக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சேலத்தில் பெரும்பாலான இடங்களில் இப்போதும் கைகளில் கொலுசு செய்வது தான் காரணம். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது. மேலும் படிக்க.,

குடியரசு தினவிழா: அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம் – பரிசுகளை அள்ளிய தமிழ்நாடு

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடமும் கிடைத்துள்ளது. புதுதில்லியில் 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பின் போது பங்கு கொண்ட தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருதினை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. மேலும் படிக்க.,

மேலும் காண

Source link