Makkal Needhi Mayyam Leader Actor Kamalhassan Confirm Competition Lok Sabha Election 2024

மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இச்சூழலில் நாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில்  அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 
இச்சுழலில், புதுச்சேரி மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜனவரி 22) நடைபெற்றது.  இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இன்னும் முடிவு எடுக்கவில்லை:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் , கட்சியின் கட்டமைப்புகள் பற்றி பேசியிருக்கிறோம். அதேபோல் தேர்தல் பற்றியும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றியும் பேசியிருக்கிறோம்.” என்றார். அப்போது அவரிடம் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அது பற்றி தற்போது ஏதும் பேசவில்லை” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில்… pic.twitter.com/7pgZUsc2kN
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 21, 2024

தொடர்ந்து பேசிய அவர், ”மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி, நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார். மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டார். அதற்கு அவர், ‘ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து கூறிவிட்டேன்” என்றார்.
 
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: அயோத்தி பிரச்னைக்கு முடிவு கட்டிய நீதிபதிகள்! இப்போ என்ன செய்றாங்க?
 
மேலும் படிக்க: CM Stalin: தமிழ்நாடு மக்கள் பெரியாரையும் போற்றுவார்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்
 

Source link