அணையை கடந்து வழியும் வெள்ளம் – அச்சத்தில் ஓட்டம் பிடித்த எம்எல்ஏ…

ஆபத்தான முறையில் அணையை கடந்து வழியும் வெள்ளம் – அச்சத்தில் ஓட்டம் பிடித்த எம்எல்ஏ….

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடம் அணை நீர்பிடிப்புப் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடம் அணைக்கான நீர்வரத்து 4 லட்சம் நொடிக்கு கன‌அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் கொள்ள‌ளவான 700 அடியில் 699.5 அடியை தொட்டுள்ளதால், அணையை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது. அணையில் உள்ள 18 மத‌குகளையும் திறந்துவிடுவதற்காக அதிகாரிகள் முயன்ற போது, 4 மதகுகள் வேலை செய்யவில்லை. இதனால், மதகுகளை கடந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.

நிலைமையை பார்வையிடுவதற்காக அதிகாரிகளுடன் எம்எல்ஏ ரேகா நாயக் சென்றார். அணையின் மேற்பரப்பில் காரை நிறுத்திவிட்டு சென்று பார்த்த போது, ஆபத்தான நிலையில் தண்ணீர் வழிந்தோடுவதைக் கண்டு அச்சமடைந்தார்.

இதனால், அங்கிருந்து ஓட்டம் பிடித்த‌தோடு, காரையும் பின்னோக்கி எடுத்துக்கொண்டு சென்றார். அதிகாரிகளும் அவருடன் ஓடிச் சென்றனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அணையின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.