டி20 போட்டியில் இந்தியா அடுத்த தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகின்றன. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வரமா 51 ரன்களை குவித்தார். இசான் கிசான் 27 ரன்களையும் ஹர்திக் பாண்டியா 24 ரன்களையும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில், ஹொசைன், ஜோசப், செப்பர்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர், 153 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.3ஆவது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் நிக்கலஸ் பூரன் 4 சிக்சர்கள் 6 ஃபோர்களை விளாசி 67 ரன்களை குவித்தார். இதனால், அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்திந அணி தரப்பில், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், மீதமுள்ள 3 போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.