Traffic Diversion due to cmrlofficial work at Anna flyover Nungambakkam and Sterling Road


Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள், சாலை விரிவாக்க பணிகள் என ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இன்று முதல் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எந்தெந்த வழித்தடங்கள்?
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “GCTP- CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டேர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கீழ்கண்ட CMRL நிலையங்களில் கட்டுமான பணிக்காக 1 அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், 2 நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3 ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி) இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம் (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம் (எற்கனவே உள்ளபடி).
வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம். மற்ற பிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு அனுமதிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
J.P.Nadda: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! இன்று சென்னை வரும் ஜே.பி.நட்டா – ஓ.பி.எஸ். உடன் சந்திப்பா?

மேலும் காண

Source link