Who Is Kaliyaperumal AIADMK Candidate Lok Sabha Election Tiruvannamalai Know Profile Biodata – TNN | Kaliyaperumal Profile: திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்?

நாடாளுமன்ற தேர்தல்
இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டம் அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது. இந்நிலையில் வரும் 22 -ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
 

 
இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் திருவண்ணாமலை  வேட்பாளர்
அந்த வகையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் திருவண்ணாமலை  நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவர் 1989ஆம் ஆண்டு கழக பணி மற்றும் கட்சி பொறுப்பில் இருந்துள்ளார். பின்பு முன்னாள் ஒன்றிய மாணவரணி இணை செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ,முன்னாள் இயக்குனர் அழகானந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வாங்கி  யிலும்  இருந்துள்ளார். கலியபெருமாள் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் விசுவாசி அக்ரி சொல்வதைத்தான் இவர் செய்வார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்து இருந்தனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நம்பிக்கையானவர் மற்றும் நெருங்கியவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் கலிய பெருமாளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு வாங்கி தந்தவர் என அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 
 

 
திருவண்ணாமலை களநிலவரம்
திருவண்ணாமலையில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகிறது. இதில் திமுக சார்பில் தற்போதைய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை மீண்டும் போட்டியிடுகிறார். இதனால் அதிமுகவுகவில் பெரிய அளவில் வெளியில் யாரு என்று தெரியாமல் இருக்கும் கலிய பெருமாளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இவர் வன்னியர் சமூகம் என்பதால் இவருக்கு வாக்கு கிடைக்கும் என்று களநிலவரம் கூறுகிறது. 
வெற்றி வாய்ப்பு யாருக்கு  ?
திருவண்ணாமலை நாடாளுமன்றம் பொறுத்தவரையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கி உள்ளது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரைக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் புதிய முகமாக அதிமுக சார்பில் கலிய பெருமாளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிஎன் அண்ணாதுரை மீது மக்களிடையே அதிருப்தி நிலவி இருக்கு, இதனால் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணாமூர்த்தி ஆகியோர் அதிமுக உட்கட்சி பூசல் இல்லாமல் அதிமுக வேட்பாளருக்கு இறங்கி வேலை பார்த்தால் திமுக வேட்பாளருக்கு  மிகவும் சவாலாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.  

Source link