Tamil Nadu Budget 2024 FM Thangam Thennarasu Budget Announcement on Tamil Language Tribals


அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே அதிக நிதியை ஒதுக்குவது தமிழகம்தான் என்று அமைச்சர்  தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசி வருவதாவது:
’’சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 
கீழடி உள்ளிட்ட 8  இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு செய்யப்படும்.
பழங்குடி மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களை பாதுகாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும்.’’
இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மேலும் காண

Source link