Lok Sabha Election 2024: ஆரணி தொகுதியில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பாமக, திமுக, அதிமுக வேட்பாளர்கள்


<p style="text-align: justify;">வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பாமக சார்பில் வேட்பாளர் கணேஷ்குமார் அண்ணாசிலையிலிருந்து காந்தி ரோடு மார்க்கெட் வீதியில் டிராக்டரை ஓட்டி வேட்பாளர் கணேஷ்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.&nbsp;</p>
<p style="text-align: justify;">பின்னர் பழைய பேருந்து நிலையம் கோட்டை வீதியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். <strong>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் கணேஷ்குமார்,</strong> மீண்டும் 3வது முறையாக அமோகமாக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார். பட்டு பூங்கா அமைக்க சீரிய முயற்சி நடவடிக்கை மேற்கொள்ளபடும். ஆரணி நாடாளுமன்ற தொகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால் குடிநீர் தட்டுபாடு விவசாயம் செழிக்க உலக வங்கி நிதிஉதவியுடன் செய்யாற்று பெண்ணையாற்றை இணைத்து நந்தன் கால்வாய் பூர்த்தி செய்து திட்டம் கொண்டுவரப்படும் இவ்வாறு அவர் பேசினார்.</p>
<p style="text-align: justify;">ஆரணி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் கஜேந்திரன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஜி.வி.கஜேந்திரன் என்பவர் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்தன. இதனையொடுத்து இன்று அதிமுக சார்பில் வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் கோட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் துணை அலுவலர் பால சுப்பிரமணியனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனையொடுத்து அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.அதேபோல் ஆரணி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தாரணி வேந்தன் ஆரணி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.&nbsp;</p>

Source link