தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான ஒரு முகமாக மாறும் நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரிச்சா பலோட். 16 வயது முதல் மாடலிங் துறையில் ஈடுபட்டு ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1991ம் ஆண்டு வெளியான ‘லாமே’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் நேரடியாக ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் ரிச்சா பலோட்.
2001ம் ஆண்டு ரவி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ஷாஜகான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நிழல்கள் ரவி, விவேக், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே விஜய் ஜோடியாக நடித்து தூள் கிளப்பினார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்த ரிச்சா பலோட் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
ஷாஜகான் படத்தை தொடர்ந்து அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங், காதல் கிறுக்கன், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த ரிச்சா பலோட்டுக்கு வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் இறங்கினார். இரண்டு இந்தி சீரியலில் நடித்த பிறகு 2011ம் ஆண்டு ஹிமன்ஷூ பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி கொண்ட நடிகை ரிச்சா பலோட் அவ்வப்போது விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்த தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.
ஷாஜகான் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வரையில் முணுமுணுக்கப்படுகின்றன. மணி ஷர்மாவின் இசையில் ஆல் டைம் ஃபேவரட் பாடல்களாக இன்றைய தலைமுறையினர் ரசித்து வருகிறார்கள். அதன் மூலம் ரிச்சாவின் முகமும் ரசிகர்கள் மத்தியில் பிரெஷாக இருக்கிறது. முதல் படத்திலேயே ரிச்சா பலோட்டுக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ரிச்சா பலோட் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார். ஷாஜகான் படத்தில் பார்த்தது போலவே இருக்கீங்களே… மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என கமெண்ட் மூலம் ரசிகர்கள் ரிச்சா பலோட்டுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தற்போது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் ரிச்சாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் ரசிகர்கள் தங்களின் ஆதரவை லைக்ஸ் மூலம் குவித்து வருகிறார்கள்.
மேலும் காண