actress Gouri Kishan reacts to social media comments about her glamour | Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா?


வாய்ப்பு பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “96”. இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்து கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். எங்கு போனாலும் இன்றளவும் அவரை அந்த படத்தின் கேரக்டரான ஜானு என சொல்லி அழைக்கும் அளவுக்கு புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த கர்ணன், ஜி.வி.பிரகாஷ் நடித்த அடியே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட, அதற்கு இணையவாசிகள் பலவிதமான கமெண்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கௌரி கிஷன் கருத்து தெரிவித்துள்ளார்.  

ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் கொடுத்துள்ள அவர், “96 படத்தில் நான் நடித்த ஜானு கேரக்டர் பலரின் மனதுக்கும் நெருக்கமான ஒன்றாக அமைந்தது. பலரும் ஜானு மூலம் தங்கள் முதல் காதலை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் நான் இப்போது வரை அந்த கேரக்டராக தோன்ற காரணமாக அமைகிறது. ஆனால் என் வாழ்க்கை அப்படியில்லை. அது ஒரு கேரக்டர் அவ்வளவு தான். அந்த படத்தில் நான் நடிக்கும் போது 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதனைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. இந்த கேரக்டரை சரியாக செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது என கூறினார். 
தொடர்ந்து பேசிய கௌரி கிஷன், “கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது பட வாய்ப்பு பெறுவதற்கான யுக்தியா என கேட்கிறார்கள். இதுதொடர்பான கமெண்டுகள் சகிக்கவே முடியாத அளவுக்கு உள்ளது. அதனால் நான் அதனை படிக்காமல் தவிர்த்து விடுவேன். ஆனால் என் குடும்பத்தினர், நண்பர்கள் படித்து வருத்தப்படுகிறார்கள். எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான நடிகைகளுக்கும் இத்தகைய கமெண்டுகள் வருகிறது. சமூக வலைத்தளம் என்பது ஆக்கப்பூர்வாக செயல்படும் இடமாகும். 

இங்கு நாம் யார் என்பதை வெளியுலகுக்கு அறிமுகம் செய்வோம். அது எப்படி இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அது தவறல்ல. ஆனால் நடிகையாக தெரிய வேண்டும் என்றே நினைக்கிறேன். அது என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்காது. சமூக வலைதளங்களில் இருந்து கிடைக்கும் ரசிகர்களின் அன்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் பலர் உள்ளனர். இது ஒரு தொடர் போராட்டம்” என கௌரி கிஷன் தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link