பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபாஸ்
ஹீரோவாக நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பின் கிட்டதட்ட சூப்பர் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்தப் பெரிய பட்ஜட் படங்கள் பான் இந்திய அளவு விளம்பரங்கள் என பிரபாஸ் நடித்து வரும் படங்களில் செலவு பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆதிபுருஷ் படத்தின் தோல்விக்குப் பின் சரிந்த பிரபாஸின் பாலிவுட் மார்க்கெட் சலார் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. சலார் திரைப்படம் வெளியாகி ஒரு மாத காலமே ஆகும் நிலையில் பிரபாஸ் நடித்து வரும் அடுத்தப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது
கல்கி 2898
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898. உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் 600 கோடி ரூபார் செலவில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
ரிலீஸ் தேதி
The story that ended 6000 years ago.𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐌𝐚𝐲 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒.The future unfolds. #Kalki2898AD@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9 pic.twitter.com/TRrL5pCTUZ
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) January 12, 2024
முன்னதாக கல்கி 2898 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்றது. அதிகளவிலான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து இந்தப் போஸ்டரை மேம்படுத்தி படக்குழு மீண்டும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. தற்போது கல்கி 2898 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.